Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உருமாறிய கொரோனா – தமிழக முதல்வர் ஆலோசனை …!!

உருமாறிய கொரோனவை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில், ஏற்கனவே இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில்  உருமாறிய கொரோனாவை தடுப்பது எப்படி ? தமிழகத்தில் அதற்கான தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடவடிக்கை என்னென்னவெல்லாம் எடுக்க வேடனும் என முதல்வர் ஆலோசிப்பார் என தெரிகின்றது. ஏற்கனவே ப்ரிட்டனியில் இருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு,

அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வரக் கூடிய நிலையில், மேலும் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் யார் , யார் ?  என்பது தொடர்பான விவரங்களை சேகரிப்பது, அவர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது, மாவட்டத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை பணிகள் என்னென்ன ? என்பது குறித்து முதலமைச்சர் கேட்டறிய இருக்கின்றார்.

Categories

Tech |