உலோகப் பாத்திரங்களில் நாம் சமையல் செய்து சாப்பிடும் போது நன்மையை விட அதிக அளவு தீமையே உண்டாகிறது. அலர்ஜி முதல் தைராய்டு, நீர்கட்டி, இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அலுமினிய பாத்திரத்தில் ஏற்படும் தீமை:
அலுமினிய பாத்திரத்தில் உள்ள கனிமம் காற்றோடு வினைபுரிந்து அலுமினிய ஆக்சைடாக மாறி சமைக்கும்போது உணவுடன் கலந்து நமது உடலுக்குள் செல்கின்றது. இதனால் உள்ளுறுப்புகள் அதிக அளவில் பாதிக்கின்றது.
இண்டோலிய பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்:
அலுமினியம் மற்றும் 4.5% உலோகங்கள் சேர்ந்த கூட்டு கலவையான இண்டோலியம். அலுமினிய பாத்திரங்களை ஒப்பிடும்போது இண்டோலிய பாத்திரங்கள் நல்லது என பலரும் நினைக்கின்றனர். அதுவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
நான்ஸ்டிக் பாத்திரங்கள்:
மக்கள் அதிகம் உபயோகப் படுத்தும் நான்ஸ்டிக் பாத்திரம் ஒரு அலுமினியம் அல்லது வேறு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரத்தின் மேல் டெப்லா என்று சொல்லக்கூடிய ஒட்டாத தன்மையுடைய ஒரு பொருளால் கோட்டிங் செய்திருப்பார்கள். இதை சூடேற்றும் போது எளிதில் ஆவியாகக் கூடும். இதனை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்குதான்.
செம்பு பாத்திரத்தில் ஏற்படும் தீமை:
செம்பு பாத்திரத்தை முறையாக பராமரிக்காத போது இரும்பு பாத்திரங்கள் எப்படி துரு பிடிக்குமோ அதே போன்று செம்பு பாத்திரம் துருப்பிடிக்கும். இதுவும் ஒரு நச்சுப்பொருள்.
சில்வர் பாத்திரங்கள்:
குரோமியம் மற்றும் நிக்கல் கலந்த கலவைதான் சில்வர் பாத்திரம். சில்வர் பாத்திரங்கள் நல்ல தரமான சில்வர் பாத்திரங்கள் குரோமியம் அதிகமாகவும், நிக்கல் குறைவாகவும் இருக்கும். தரம் குறைந்தவை குரோமியம் குறைவாக, நிக்கல் அதிகமாக இருக்கும். இதனால் நுரையீரலில் பிரச்சனை ஏற்படும்.
இரும்பு பாத்திரங்களால் ஏற்படும் தீமைகள்:
நம் உடலில் மிகவும் நல்லது இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவது என்று கூறுகின்றனர். ஆனால் துருப்பிடிக்காத இரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.
மண் பாத்திரங்கள்:
நம் முன்னோர்கள் நமக்கு காட்டி சென்ற 100 சதவீதம் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்று என்னவென்றால் மண் பாத்திரங்கள். இதில் சமைக்கும் போது உணவின் தரமும் சுவையும் அதிகரிக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ, மண் பாத்திரங்கள் நமக்கு உதவி புரியும். அன்றாட வாழ்க்கையில் மக்கள் நல்ல உடல் ஆரோக்கியமும், சிறந்த உடல் உழைப்பையும் பெற்றிருக்க வேண்டும்.