Categories
தேசிய செய்திகள்

அப்போ “GO கொரோனா”… இப்போ “NO கொரோனா”… வைரலாகும் கொரோனா கோஷம்…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் கொரோனா ஓடிவிடும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இது பற்றி மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், “ஆரம்பத்தில் ‘கோ கொரோனா’ என்று கோஷமிட்டேன். கொரோனா ஓடிவிட்டது. ‘தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வந்துள்ளதால் ‘நோ கொரோனா! நோ கொரோனா!’ என கோஷமிடுங்கள். உடனே ஓடி விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Categories

Tech |