பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டு தோறும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை மேலும் தித்திக்கும் பொங்கலாக மாற்றும் தன்மை அச்சுவெல்லத்திற்கே உள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சுவெல்லம் செய்வதற்கு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
மாகாளிபுரம், வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், உள்ளிக்கடை, கணபதி அக்ரகாரம், பட்டுக்குடி, போன்ற 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அச்சுவெல்லம் தயாரிப்பதற்காக கரும்புகளை பயிரிட்டுள்ளனர். தற்போது அவர்கள் வெல்லம் தயாரிக்க ஆரம்பித்து உள்ளனர்.
பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் ரூ. 2500 ரொக்கம் ,பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு போன்றவை வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளது. இதில் சர்க்கரைக்கு பதிலாக வெள்ளத்தை வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.