Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற முதியவர்… திடீரென வந்த காட்டு யானை… பின்னர் நடந்த கொடூரம்….!!

காட்டு யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் முகம்மது நியாஸ். இவர் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் நிலத்தில் வாட்ச்மேன் வேலை செய்து வந்தார். பணியில் இருந்த  முகம்மது நியாஸ் இன்று காலை 6 மணி அளவில் டீ சாப்பிட மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென சட்டக் கல்லூரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை முகம்மது நியாஸை தும்பிக்கையால் தாக்கி தூக்கி வீசியுள்ளது.

இதில் அவர்  சம்பவ இடத்திலேயே  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். யானை தாக்கிய சம்பவத்தை  பார்த்த  பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். அவர்களின் சத்தத்தை கேட்ட யானை அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகம்மது நியாஸ்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |