Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பச்சை மிளகாய் குழம்பு… செய்து பாருங்கள் …!!!

பச்சை மிளகாய் குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

பச்சை மிளகாய்         – 16
குட மிளகாய்               –  2
தக்காளி                          –  2
சீரகம்                               –  2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்  – 16
எண்ணெய்                   – தேவையான அளவு
உளுந்தம் பருப்பு      –  1/2 ஸ்பூன்
புளி                                  – சிறிது
வெந்தயம்                   –  2 ஸ்பூன்
உப்பு                               – தேவையான அளவு

செய்முறை : 

முதலில் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் . பிறகு புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவேண்டும் .பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .

அதன் பின்  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் . பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும் .

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும் .

பின்பு  மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

Categories

Tech |