Categories
சினிமா தமிழ் சினிமா

மாறி மாறி ஆரியை குறை கூறும் ரம்யா, ஷிவானி … வெளியான செகண்ட் புரோமோ …!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று அனிதா வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது. ஆரி இந்த வாரம் கேப்டன் பதவியில் இருப்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது .

இதையடுத்து ஒவ்வொருவரும் நாமினேட் செய்பவர்களின் பெயர்களை கூறி வருகின்றனர். அதில் அதிகமானோர் கேபி, ஆஜித் ,சிவானி ஆகியோரின் பெயரை கூறினர் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் சிவானி மற்றும் ரம்யா இருவரும் ஆரியை பற்றி பேசுகிறார்கள் . அதில் ரம்யா ,’ஆரி எல்லாமே கரெக்டா பண்ணனும்னு நினைக்கிறார் . அது ஆடியன்ஸுக்கு பிடிக்குமா என்பது கூட தெரியவில்லை’ என்று கூறுகிறார் . இதையடுத்து பேசிய ஷிவானி ஆரி சுயநலவாதியாக இருப்பதாகக் கூறுகிறார். இவ்வாறு இருவரும் மாறி மாறி ஆரியை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கின்றனர் .

Categories

Tech |