Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் நெக்ஸ்ட் பிளான்… “நிலாவில் அணுவுலை”… சீனா எதிர்ப்பு..!!

அமெரிக்கா நிலவை அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்றம் திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமெரிக்கா எரிசக்தி துறை மற்றும் நாசா இணைந்து 2026 ஆம் ஆண்டு ஒரு அணு உலை அமைக்க திட்டம் தீட்டி இருந்தது. இதற்கான அனுமதியை புதிய விண்வெளி கொள்கை அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டிருந்தார். இந்த திட்டத்தின் நோக்கம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா இருப்பதை அதிகரிக்க முயற்சியாகும். சந்திரனுக்கு அப்பால் வலுவான மனித உறவுகளை வலுப்படுத்த அணுசக்தி உந்து விசையை பயன்படுத்துகிறது என்பதுதான்.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் பயணம் செய்வது உள்ளிட்ட பல திட்டங்களில் கவனம் கொண்டு இதனை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நாஸாவின் முதன்மை நோக்கம் சந்திரனில் ஒரு மேற்பரப்பு அமைக்க வேண்டும் என்பதுதான். பத்தாயிரம் கிலோவாட் மேற்பரப்பு சந்திரனின் மேற்பரப்பில் சோதிக்கப்படும். 2026 களின் பிற்பகுதியில் சந்திரனின் இந்த அமைப்பை அமைக்க திட்டமிட்டு இருந்தது. சந்திரனில் அணுமின் நிலையம் அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

உலக நாடுகளுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது எதிர்காலத்தில் ராணுவத்துக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேற்பரப்பில் அதிக அளவில் இருக்கும் ஜூலியன் அணுசக்தி இணைவு மூலம் ஆற்றலை உற்பத்தி செய்து அமெரிக்கா பயன்படுத்தலாமா என்று சீன நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |