Categories
மாநில செய்திகள்

“கட்சி தொடங்க பயந்து” ரஜினி நாடகமாடுகிறாரா…? கமல் அதிரடி பதில்…!!

நடிகர் ரஜினி கட்சி தொடங்க பயந்து நாடகமாடுகிறாரா? என்ற கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் ரஜினிக்கு ஒருவாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளதால் அவருடைய அரசியல் அறிவிப்பு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் பிரச்சாரம் செய்து கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது கட்சி தொடங்குவதற்கு நாடகமாடுகிறாரா ரஜினிகாந்த் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “எனது 40 ஆண்டுகால நண்பருக்கு முதலில் உடல்நலம் தான் முக்கியம். பிறகு தான் அவர் அரசியல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பயந்து தான் உடல்நலம் சரியில்லை என்று நாடகமாடுகிறார் என வதந்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தாலும், வருகின்ற டிசம்பர் 31ம் தேதி நிச்சயம் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |