Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகம் காப்போம்”… ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம் திமுக… ஸ்டாலின் அதிரடி…!!!

மதுரையில் நேற்று நடைபெற்ற “தமிழகம் காப்போம்”மாநில மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்து கொண்டார்.

மதுரையில் நேற்று மக்கள் விடுதலை கட்சியின் சார்பாக “தமிழகம் காப்போம்” மாநில மாநாடு நடைபெற்றது. காணொலி  மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். “தமிழகம் மீட்போம்” என்று திமுக சொல்வதும், “தமிழகம் காப்போம்” என்று மக்கள் விடுதலை கட்சி சொல்வதும் ஒன்றுதான். தமிழகத்தை மீட்டால் தானே காப்பாற்ற முடியும்.

அனைத்து மக்களின் உயர்வுக்கான இயக்கம் தான் திராவிட இயக்கம். தமிழ் மக்களுக்குள் பிரிவுகள் இல்லை. மேல்,கீழ் என்ற பேதமும் இல்லை. என்பதை உருவாக்க திராவிட இயக்கம் முயற்சிக்கும். மதம், இனம் போன்ற காரணங்களை காட்டி மக்களை அடிமை செய்ய முயற்சிப்பவர்கள் இருக்கும் வரை மக்கள் விடுதலை கட்சிகள் தேவை. ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கமாக தி.மு.க. செயல்படுகிறது.

நாங்கள் ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைகளை சட்டங்கள் ஆக்குவோம். ஆட்சியில் இல்லாவிடில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக போராடுவோம். அனைத்து மக்களின் உயர்வுக்காக நடத்தப்படும் ஆட்சி தான் தி.மு.க. ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தி.மு.க விளங்குகிறது. ஆனால் தற்போது நடப்பது ஆட்சி அல்ல. காட்சியே!

தமிழகம் இன்று அடிமையாக இருக்கிறது.  ஒரு காலகட்டத்தில் புகழ்மிக்க தமிழகமாக விளங்கியது. தமிழ்நாடுட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவை பாஜக அதிமுக ஆட்சியிலேயே நாம் பார்த்துவிட்டோம். இனியும் நாம் “பொறுக்க முடியாது”. “பொங்கி எழுவோம்”. “தமிழகம் மீட்போம்”. “தமிழகம் காப்போம்”.என்று திமுக தலைவர் காணொலி  மூலம் பேசினார்.

Categories

Tech |