சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறியுள்ளது புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வர்த்தக ரீதியாக சிலர் இந்தியா வருவதற்கு மூன்றாம் உலக நாடுகளின் வழியாக விமான போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதனைப் போலவே இந்தியாவில் இருந்தும் சிலர் சீனா சென்று வருகிறார்கள். அப்படி வருபவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டாமென விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.