Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களின் கனவு நனவாகியது…! தமிழகத்தின் 38வது மாவட்டம்…! உதயமானது மயிலாடுதுறை…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்

தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட கலெக்டர்களும் அரசால் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |