எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் தங்களது வீட்டுகாகவே உழைத்து வருகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் .
கமிஷனும், கலெக்சனும் மட்டுமே முதலமைச்சரின் கண்களுக்கு தெரியும். திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, சென்னை மாநகர துணை முதலமைச்சராக, தமிழகத்திற்கு ஆற்றிய சாதனைகள் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டுக்காக திமுக என்ன செய்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவின் வரலாறுகள் தெரியாது.
எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளை ஒரு அறையில் இருந்து தனியாகப் படித்து பாருங்கள் அப்பொழுது தான் புரியும், அண்ணாவும், கருணாநிதியும் இம்மாநிலத்திற்காக என்ன சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்று தெரியும். ஊழல் மழையினால் நனைந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் திமுக பற்றியோ அல்லது எங்கள் தலைவர் பற்றியோ விமர்சிப்பதற்கு என்ன அருகதை இருக்கிறது?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே சாதனைகளை சொல்ல முடியாமல் திணறி உள்ளார். நடக்கவிருக்கும் கூட்டங்களிலும் அவர் திக்குமுக்காடப் போகிறார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.