Categories
சினிமா தமிழ் சினிமா

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் இன்று காலமானார் … ரசிகர்கள் இரங்கல்..!!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் .

தமிழ் திரையுலகில் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான் . இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ,தெலுங்கு, சைனீஸ் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார் . இவர் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் .

கரீமா பேகம்

ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இவரின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார் . ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்திலும் அவரது தாய் முக்கிய பங்கு வகித்தார் ‌. மேலும் அவர் பல பேட்டிகளில் தனது தாய் கரிமா பேகம் மிகவும் துணிச்சலானவர் என்று கூறியுள்ளார் ‌. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஏ .ஆர் .ரகுமானின் தாயார் கரிமா பேகம் இன்று காலமானார் . மேலும் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ‌.

Categories

Tech |