புதிய கொரோனோவால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சில மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30,501 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் உள்ள சில மருத்துவமனைகள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 316 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இறந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்தமாக 70 ,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இங்கிலாந்தில் உள்ள சில பகுதிகளில் தொற்று பாதிப்பு குறித்த விபரங்கள் வெளியாவில்லை. இதனால் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு அயர்லாந்தில் புதிதாக ஏற்பட்டுள்ள தொற்றுகள் மற்றும் இழப்புகள் குறித்து புகார் அளிக்கப்படவில்லை மற்றும் ஸ்காட்லாந்து இழப்புகளும் பதிவு செய்யபடவில்லை. வேல்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 70 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இறந்துள்ளனர். இதனால் லண்டனில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகலில் ஒரு மணிநேரத்தில் 400க்கும் மேற்பட்ட அழைப்புகளை வந்துள்ளதாம். மேலும் அவசர காலங்களில் 999 என்ற எண்ணை மட்டும் அளிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.