36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை நல்லடக்கம் செய்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த மேகலாவின் அண்ணனுக்கு பனிப்பிச்சை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பனிப்பிச்சை கடிதம் ஒன்று எழுதி தன் மகனிடம் கொடுத்து அதை தன்னுடைய மனைவியின் அக்கா மகளான 16 வயது சிறுமியுடன் கொடுக்கச் சொல்லி உள்ளார். அந்தக் கடிதத்தைப் பார்த்த அந்த 16 வயது சிறுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் பனிப்பிச்சை செல்லம், செல்லம் என்று வரிக்கு வரி ஆசையாக எழுதி இருந்துள்ளார். மேலும் சிறுமியை தான் காதலிப்பதாகவும் அதனால் தான் அவருடைய மனைவி மேகலாவை அடித்துக் கொலை செய்து விட்டதாகவும் எழுதி இருந்துள்ளார்.
அந்த சிறுமிக்ககாகவே தான் உயிரோடு இருப்பதாகவும், தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேராக இனி நாம் நன்றாக வாழலாம் என்றும் எழுதியுள்ளார். மேலும் இன்னும் சின்ன பிள்ளையாக இருக்காதே. நம்மை கடவுள் ஆசீர்வதிப்பார், பயப்படாமல் என்னை காதலி. நீ எனக்கு வேணும் செல்லம் என்றும் எழுதியிருக்கிறார். இது குறித்து அந்த சிறுமியின் மாமாவான மேகலாவின் அண்ணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில், தன்னுடைய மனைவியுடன் பிறந்த மூத்த சகோதரியின் மகளான பதினோரு வயது சிறுமி ஆன்லைன் வகுப்பிற்காக தனது வீட்டிற்கு வந்து வைபை உதவியுடன் பாடம் படித்து சென்றுள்ளார். அப்போது பனிப்பிச்சை சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நிலையில், மேகலாவுக்கு தன கணவர் மீது சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து தனது தவறான செயல்களுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி பனிபிச்சை தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பனிபிச்சையை கைது செய்துள்ளனர்.