தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகைக்கு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை மோனல் கஜ்ஜார் ‘சிகரம் தொடு’, ‘வானவராயன் வல்லவராயன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . இவர் சமீபத்தில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாக பேசப்பட்டது . ஆனால் அதை இருவரும் மறுத்தனர் . இதையடுத்து இவர் 98 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் . இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமடைந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் .
இந்நிலையில் இவருக்கு தெலுங்கில் பட வாய்ப்புகளும் டிவி நிகழ்ச்சிகள் வாய்ப்புகளும் ஏராளமாக கிடைத்துள்ளது . இதையடுத்து நடிகை மோனலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரிக்கும் ‘காகஜ்’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் சதீஷ் கௌசிக் இயக்கும் இந்தப்படத்தில் பிரபல ஹீரோ பங்கஜ் திரிபாதி நடிக்கிறார். தற்போது பல வருடங்களுக்குப் பின்பு ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியில் உள்ள நடிகை மோனலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .