பிக்பாஸ் பிரபலம் அனிதாவின் கணவர் சமூகவலைத்தள பக்கத்தில் என் தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என பதிவிட்டுள்ளார் .
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் அனிதா. செய்தி வாசிப்பாளரான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் . நேற்றைய எபிசோடில் மக்களில் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார் . இவர் பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு அணியுடனும் சேராமல் தனித்துவமாக நின்று விளையாடி வந்தார் .
ஆனால் இவர் அடிக்கடி போட்டியாளர்களிடம் கோபப்பட்டு பேசும் விதம் ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தது . அனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது எந்த பிரச்சினை நடந்தாலும் இவரின் கணவர் பிரபாகரன் இவருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டார் . தற்போது அனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டதால் என் தேவசேனா திரும்பி வந்து விட்டாள் என பதிவிட்டு பிக்பாஸில் அனிதாவுக்கு கொடுக்கப்பட்ட ஸ்மைலி பொம்மை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .