Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தங்கையின் திருமணம்”… அல்லும் பகலும் பாடுபட்ட அண்ணன்… விபத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்..!!

கோவை அருகே தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவாசகன் என்பவரின் மகன் 25 வயதான யுவராஜ். ஐடி ஊழியரான இவர் தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் பகுதி நேர வேலையை செய்து வந்தார். மாலையில் வேலைக்கு சென்று இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம். இரவு நேர வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு கொண்டிருந்த அவர் புளியங்குளம் பங்கஜமில் ரோட்டில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தடுப்பு சுவற்றில் மோதி யுள்ளார்.

இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தனது தங்கையின் திருமண செலவிற்காக பணத்தை ஈட்ட பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |