ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மட்டுமே போதாது. சில உணவுகளை கொடுக்க வேண்டும்.
அதனால், பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டாலே, ஒவ்வொரு தாய்க்கும் தங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவைகளைத் தர வேண்டும் என்ற குழப்பம் ஏற்படத் தொடங்கி விடுகிறது. அதிலும் குறிப்பாக, ஒரு வயது நிரம்பியவுடன், எப்படிப்பட்ட உணவைத் தந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள், அவர்களின் செரிமானத்திற்கு ஏற்றது எது என்ற தேடல் இன்னும் அதிகரித்து விடும்.
அந்த வகையில் ஒரு வயது குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம். முக்கியமாக இந்த உணவுகள் அனைத்தும் வீட்டில் தயாரித்ததாக இருக்க வேண்டும். காரம் குறைந்த அளவில் சேர்த்து நன்கு வேக வைத்துக் கொடுக்கவேண்டும்.
காலை உணவு :
இட்லி / தோசை /சாம்பார் மற்றும் சட்னி வகைகள்/இடியாப்பம்/உப்புமா /கிச்சடி/வெண்பொங்கல்/சத்து மாவு கஞ்சி / கம்பு கலி / கேழ்வரகு கலி
முன் பகல் :
பழச்சாறு / பழங்கள்/காய்கறி சூப்
மதியம் :
பருப்பு சாதம் / சாம்பார் சாதம் / தயிர் சாதம்/காய் வகைகள் – பொரியல் / அவியல் / கூட்டு /கீரை / மசித்த உருளைக் கிழங்கு
மாலை 3 மணி : பழங்கள்
மாலை 5 மணி : பால்/பருப்பு சூப் / தக்காளி சூப்,பழச்சாறு / ஆரோக்கியமான தீனி வகைகள்/முளைக்கட்டிய பயறு வகைகள்
இரவு: இட்லி / ரசம் சாதம் / தோசை