தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் அம்மாவின் மினி கிளினிக் துவங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது: “10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டம் மட்டும் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு பூஜையும் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு கிடையாது. பொது தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவியில் இடம் பெற்றது குறித்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு காரணமாக பேராசிரியரிடம் விளக்கம் கேட்டும் பதிலளிக்க அறிவித்துள்ளது” என்று கூறினார்.கடந்த 9 மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நேரத்தில் ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு எடுத்த நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் அதற்கு சாதகமாக இல்லாததால் பள்ளிகள் திறப்பு தடைபட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று புதிதாக உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் அனைவரிடமும் ஏற்பட்டது. கடந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆல் பாஸ் போட்ட நிலையில் இந்த ஆண்டும் அதற்கான சூழல் அமையும் என பல்வேறு வதந்திகள் எழுந்து வந்தது. இருப்பினும் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குழப்பத்திற்கு தீர்வாக அமைந்துள்ளது.