கோவையில் பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் வடமாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின.
இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதனையடுத்து தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து காவல்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். ஒன்றரை மணி போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.