Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் யோகி பாபு வீட்டில் புது வரவு… மனோபாலா போட்ட ட்வீட்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் மனோபாலா ட்விட்டரில் தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் யோகி பாபு சில திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும் மஞ்சு பார்கவி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது . யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் ,நண்பர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகரும் இயக்குனருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் ‘நண்பன் யோகிபாபுவுக்கு ஆண் குழந்தை… மிகவும் மகிழ்ச்சி… தாயும் சேயும் நலம்’ என பதிவிட்டுள்ளார் .இதையடுத்து யோகி பாபு வீட்டிற்கு புதுவரவு வந்துள்ளதற்கு திரையுலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |