விருச்சிகம் ராசி அன்பர்களே..! இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாளாக இருக்கும்.
வியாபார விருத்தி உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்க்க கூடும். குடும்ப சுமை இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் என்பதால் எதிலும் கவனம் வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.எந்தப் பணியாக இருந்தாலும் நீங்கள் உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். எந்த பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம். யாருக்கும் அறிவுரையும் கூற வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். சகோதரர்களிடம் சின்னச்சின்ன கருத்து வேற்றுமை கூடும். தாய் தந்தையார் உடல்நிலையில் கவனம் வேண்டும். எச்சரிக்கையாக எந்த பணியிலும் ஈடுபட வேண்டும். உடலில் உஷ்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.
காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சில் தேவையில்லாததை பேச வேண்டாம். மாணவ செல்வங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.