பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இறுதி நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் பாலா மற்றும் கேபி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் குறை கூறி பேசுகின்றனர் . கேபி ‘நான் ஓபன் ஆக இதுவரை பேசியதே இல்லையா? நான் வெளிப்படையாக பேசினால்தான் என்னை குத்தியிருக்கிறான்’ என்கிறார் .
#Day85 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/5eUqxgxaKZ
— Vijay Television (@vijaytelevision) December 28, 2020
இதையடுத்து பாலாஜி ஆஜித்திடம், ‘அர்ச்சனா அக்கா பண்ணுது உண்மையா ?போலியா ?எனக்கு தெரியல சந்தேகமா இருக்கு என்று பர்சனலா கேபியிடம் சொல்லி இருந்தேன் . இதை அர்ச்சனாவிடம் சொன்னது தான் பின்னாடி போய் பேசுறது . இப்ப சொல்லு பின்னாடி பேசுவது யார் நானா கேபியா’ என்கிறார் . இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் இப்படி ஒருவரையொருவர் மாறி மாறி குறைகூறிக் கொண்டிருப்பதால் சுவாரசியம் சற்று குறைவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.