பெண் ஒருவர் சிகரெட் பிடிக்க சென்றபோது பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. எனினும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள shepard bush என்ற நகரில் வசிக்கும் sharon Anne Daly o’-Dwyer என்ற 51 வயதான பெண் தன் வீட்டிலேயே குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் கொடுக்கப்பட்ட பரிசுகளை திறந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சிகரெட் குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.
அப்போது அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு ஓடி வந்த அவரது பிள்ளைகள் இருவரும் தங்களின் தாய் படியிலிருந்து விழுந்ததாக நினைத்து பார்த்துள்ளனர். அப்போது அவர் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. மேலும் மருத்துவர்கள் இவருக்கு சிபிஆர் முயற்சி செய்து பார்த்துள்ளனர்.
அதுவும் பலனளிக்காமல் போனது. இது குறித்து அவரின் மகள் டைலர் கூறியுள்ளதாவது, நான் அம்மாவிற்கு உதவி செய்வதற்காக ஓடினேன்.ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர் கண்கள் மட்டும்தான் திறந்திருந்தன மேலும் அவர் கண்களை மூடிய போது நான் கையை பிடித்து முத்தமிட்டு ஐ லவ் யூ என்று கூறினேன். அவர் எங்களுக்கு சிறந்த தாய் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவர் ஒரு பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா காரணமாக வேலையை இழந்துள்ளார்.