விஷம் குடித்து வாங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள சற்குணவீதியை சேர்ந்தவர் கோபி. இவர் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த கோபி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், ” என் இறப்பிற்கு காரணம் குருந்தன்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் மேரி குளோரி பாய். கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நான் விடுப்பு முடிந்து சங்கத்திற்கு சென்றேன். அப்போது அவர் தகாத வார்த்தைகளால்திட்டி அனைவர் முன்னிலையிலும் என்னை அவமானப்படுத்திவிட்டார். இதை நான் எனது செல்போனில் ரெக்கார்ட் செய்துள்ளேன். அவர் அவமானப்படுத்தியதிலிருந்து நான் மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்தேன். எனது மனைவியும் இரு மகள்களும் என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கின்றனர். நான் எனது குடும்பத்தினருக்கு துரோகம் செய்துவிட்டேன். என் உடன் பிறந்தவர்கள் என்னை தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விட்டார்கள். டாக்டர் விஜி அண்ணன் நான் உங்களிடம் உண்மையாக நடந்து கொண்டேன்.என் பிள்ளைகளை நன்றாக படிக்கவையுங்கள்.எனது மனைவியை காப்பாற்றுங்கள்.என்றும் உங்களுடைய கோபி ” என்று அவர் எழுதியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.