Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘பூலோகம்’ இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘பூலோகம்’ பட இயக்குனர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவிக்கு ரசிகர்கள் ஏராளம் . ரீமேக் படங்கள் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து அசத்தி  வருகிறார் ‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது  இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பூமி .

Boologam - Gallery

இந்த படம் வருகிற பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது . இந்நிலையில் ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது . தற்போது 2வது முறையாக இணையும் இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Categories

Tech |