நாட்டின் இளைய மேயராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் இன்று மேயராக பதவியேற்றுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் மேயராக பதவி ஏற்றுள்ளார். வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நவ்ஜோத் கோசா புதிய மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்ததுள்ளார்.