விமானி ஒருவர் கொரோனா தடுப்பூசிகான விழிப்புணர்வை ஏற்படுத்த சிரன்ச் வடிவில் வானில் பறந்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயதான விமானி சாமி கிராமர். இவர் ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று வானத்தில் சுமார் 200 கிலோமீட்டரில் பெரிய சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இவர் தெற்கு ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸி ஏரிக்கு அருகில் இருக்கும் வானத்திற்கு செல்வதற்கான ஜிபிஎஸ் சாதனத்தில் செல்ல வேண்டிய பாதையை வரைபடமாக்கியுள்ளார். பின்பு சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இந்த சிரிஞ்ச் வடிவத்தின் பாதையானது இணையதளம் பிளைட் ராடர் 24 ல் காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனோ வைரஸிற்கான தடுப்பூசியை இன்னும் பலர் எதிர்த்து வருகிறார்கள்.
தற்போது நான் செய்துள்ள இந்த நடவடிக்கை பலரை சிந்திக்க வைப்பதற்கான நினைவுபடுத்துதலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தொற்றுநோய் காரணமாக விமான தொழில் மிகுந்த பாதிப்படைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை ஒரு உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியுள்ளது. இந்த வருடத்தின் இறுதிக்குள் 1.3 மில்லியனுக்கு மேலான தடுப்பூசி மருந்துகளை உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கும், ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து சுமார் 7 லட்சம் பேருக்கும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.