ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு கையைப் பிடித்து பாலியல் நோக்கம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த சிறுமி அவர் காதலை ஏற்க மறுத்ததால் அவர் சிறுமியின் கையை பிடித்து காதலை கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். வேறு வேறு சீம்களில் அழைத்து தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். எட்டு மாதங்களாக இது தொடர்ந்து வந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமி 354 பிரிவின் கீழ் போக்சோ சட்டத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து புகார் அளித்தார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி இளைஞர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது நீதிபதி விசாரணை செய்தார். பாலியல் நோக்கம் இல்லாமல் கையை பிடித்து ஒரு பெண்ணிற்கு தன் காதலை சொல்வது போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு உட்பட்டது அல்ல என்று கூறினார். மேலும் அந்த சிறுமியை தொந்தரவு செய்யக்கூடாது. கட்டாயப்படுத்தக் கூடாது என்பதின் பெயரில் அந்த இளைஞருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.