மும்பை பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு 400 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரம் புள்ளிகளைக் கடந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரத்து 335 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து, 13 ஆயிரத்து 749 புள்ளிகளாக இருந்தது. சர்வதேச பங்குச்சந்தைகளின் எதிரொலியாகவே, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 403 புள்ளிகள் உயர்ந்து, 47 ஆயிரத்து 377 புள்ளிகளாக முடிவடைந்தது. அதேபோல், நிஃப்டி 131 புள்ளிகள் உயர்ந்து, 13 ஆயிரத்து 880 புள்ளிகளாக நிலை கொண்டது.