Categories
சினிமா தமிழ் சினிமா

தயாராகும் ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகம்… விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் இவரா!… செட் ஆகுமா?…!!!

சூது கவ்வும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூது கவ்வும்’ . இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது . கடந்த சில வருடங்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது குறித்து பேசப்பட்டு வந்தது.

Love to direct Hindi version of 'Soodhu Kavvum': Nalan Kumarasamy |  Entertainment News,The Indian Express

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம் . அவருக்கு பதிலாக நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘சூது கவ்வும்’ பட கதாபாத்திரத்திற்கு எப்படி 66 வயது சத்யராஜ் செட் ஆவார் ? என்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது ‌.

Categories

Tech |