கோவையில் சொத்துகளை அபகரித்துவிட்டு பராமரிக்கத் தவறியதாகக்கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூர், குப்பனூரை பகுதியை சேர்ந்த 97 வயதாகும் முருகம்மாள், தனக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை தனது மகன் ரங்கசாமி ஏமாற்றிவிட்டு எழுதி வாங்கியதாகவும், அவர் காலமான நிலையில், அவரது மனைவி தன்னை துன்புறுத்தி வருவதுடன், நிலத்தை வழங்க மறுப்பதாக, ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மனமுடைந்த முருகம்மாள், அவரது மகள்கள் மாரக்காள், லட்சுமி, பாப்பாத்தி ஆகியோர், ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து, அவர்கள் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.