நாளை முதல் தமிழகத்தில் பரப்புரையை தொடங்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்ட பேரவைத் தேர்தல் இன்னும் கொஞ்ச மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக நாளை முதல் 31ஆம் தேதி வரை நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் பரப்புரை நடைபெறும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மக்கள் நீதி மையம் சார்பாக கமலஹாசன் “சீரமைப்போம் தமிழகம்” என்றும், திமுக சார்பில் “தமிழகம் மீட்போம்” என்றும் பரப்புரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.