Categories
சினிமா தமிழ் சினிமா

என்னடா இது ஏமாத்திட்டாங்களே! பிக்பாஸ் வீட்டில் செல்போன்…. பயன்படுத்தும் சோம்….!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் சோம் சேகர் செல்போன் பயன்படுத்துவது போன்று வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் சில போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் அனிதா வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. மேலும் யாரையும் சந்திக்க கூடாது 100 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடி வரும் சோம் சேகர் அந்த வீட்டினுள் செல்போன் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்  பேசிக்கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்துவது போன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்போன் பயன்படுத்த முடியுமா? இது என்ன ஏமாற்று வேலை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் துணியில் சிந்திய உணவை துடைக்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.

Categories

Tech |