Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1ஆம் தேதி முதல் – நாடு முழுவதும் அதிரடி உத்தரவு …!!

2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்துவகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக,கொரோனா பொதுமுடக்கம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் ஆகியவற்றில் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கடும் உச்சத்தை அடைந்தது.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், தற்போது நிலமை சீராகி விட்ட காரணத்தால் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |