எம்ஜிஆர் கொடுத்த தஞ்சை தமிழ்பல்கலை கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், மொத்தமாக களவு போகும் முன் சரஸ்வதி நூலகத்தை மீட்க வேண்டும் என்றும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, மக்கள் நீதி மையத்தின் சார்பில் வாக்கு கேட்க வரும் வேட்பாளர், மக்களிடம் குறைகளைக் கேட்டு, அதனை குறித்த காலத்தில் முடிப்போம் என பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டு செயல்படுத்துவார் என்று கூறினார்.
Categories