அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருவள்ளுவரின் உடையில் காவி வண்ணம் இருந்த விவகாரம் தொடர்பாக விரிவுரையாளர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அரசு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் சார்ந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் உடையில் முழுவதுமாக காவி வண்ணம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இதற்கான பாடப் பகுதிகளை தயாரித்த பட்டதாரி ஆசிரியர்களான சீனிவாசன் மற்றும் சங்கர் ஆகியோருக்கும், நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்த ஆசிரியர் பயிற்சி மைய விரிவுரையாளர் ஒருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.