மத்திய பாஜக அரசு கல்வியாளர்களை குறிவைத்து அவமதிப்பதாக மேற்கு வங்க முதல்வர் செல்வி மம்தாபானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் பொது மக்களிடையே உரையாற்றிய செல்வி மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு அமர்த்தியாசன் , அமித்பானர்ஜி போன்ற கல்வியாளர்களை குறித்து அவமதிப்பதாகவும், இதனால் கல்வியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போல உணர்வதாகவும் தெரிவித்தார். ஜவஹர்காலால் நேரு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் செல்வி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இத்தனை ஆண்டுகளாக நேதாஜியை கண்டுகொள்ளாமல் இப்போது திடீரென அக்கறை காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.