Categories
உலக செய்திகள்

தனியாக சென்ற இளம்பெண்ணுக்கு…. நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் ஒருவர் வெறிநாய்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவில் உள்ள ulan-udae என்ற நகரில் Tatyaana என்ற 20 வயதான இளம்பெண் தனியாக நடந்து  சென்றுள்ளார். அப்போது அவரை நாய்களின் கூட்டம் சேர்ந்து கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனைதொடர்ந்து அவரின் அலறல் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடி வந்து நாய்களை துரத்திவிட்டு  உடனடியாக அவரை மீட்டு குடியிருப்பில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். பின்னர்  அவசர உதவியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் Tatyaana முகம் முழுவதும் சிதைந்து போய்விட்டது சதைப் பகுதிகள் முழுவதையும் நாய்கள்  அடையாளம் தெரியாத அளவிற்கு குத்தறிவிட்டன என்று அவரின் குடும்பத்தினர் மனவேதனையுடன் கூறியுள்ளனர். தற்போது அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுமார் 10 நாய்களை உடனடியாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் இந்த நாய்கள் ஏதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஏற்பட்ட சேதம் மிக அதிகமாக உள்ளது மேலும் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் Tatyaanaவை காப்பாற்றிய பெண் கூறுகையில், தீடிரென அலறல் சத்தம் கேட்டது. உடனே வெளியே வந்து பார்த்தபோது நாய்களுடன் இந்த பெண் போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக நாய்களை அடித்து விரட்டிவிட்டு அருகில் சென்று பார்த்தபோது உடைகள் பறிக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |