நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்து வருவதால் உடல் பலவீனம் அடைந்து உடல் ஆரோக்கியம் சீர்குலைந்து போகும்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அவ்வாறு வேலை செய்யும் போது நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும். நீங்கள் அவ்வாறு உட்கார்ந்து வேலை செய்பவர்களா. இது உங்களுக்கான டிப்ஸ். நாற்காலியில் நேராக அமர்ந்தபடியே தலையை இடது தோள் பட்டையின் பக்கமாக சாய்க்க வேண்டும்.
அதன் பிறகு வலது புறமாக சாய்க்க வேண்டும். இவனைப் போலவே தலையை மேலே உயர்த்தி யும் கீழே குனிந்து செய்ய வேண்டும். இப்படி மாறி மாறி செய்யுங்கள். இதனால் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லும். கழுத்துப் பகுதி வலுப்பெறும். இருந்தாலும் நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது உடலுக்கு கேடு விளைவிக்கும். அதனால் அவ்வப்போது சற்று இடைவேளை எடுத்துக்கொண்டு உங்கள் வேலையைத் தொடருங்கள். அவ்வாறு செய்யாமல் நீண்ட நேரம் உட்கார்ந்த படியே வேலை செய்து வருவதால், உங்கள் முதுகு எலும்பு பலவீனம் அடைந்து வரும் காலத்தில் அது தீராத வழியாக மாறிவிடும். அதனால் சற்று கவனமாக இருங்கள்.