தமிழகத்தில் இன்று முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக இன்று முதல் 31ஆம் தேதி வரை நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் பரப்புரை நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மையம் சார்பாக கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்றும், திமுக சார்பாக “தமிழகம் மீட்போம்” என்றும் பரப்புரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.