நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வு களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதை நாட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் முடிவடையும்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த மாதம் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அதனால் நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊரடங்கு தொடரும். கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தொடரும். உருமாறிய கொரோனா வைரஸ் குறித்த கூடுதல் விழிப்புணர்வு வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.