பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும் . பிரீஸ் டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தருவர் .
#Day86 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/eZ6ZjRQtIz
— Vijay Television (@vijaytelevision) December 29, 2020
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார். தன் தாயை பார்த்ததும் அழுது கொண்டே அவரை கட்டி அணைக்கிறார் சிவானி . பின்னர் அவர் தாயாருடன் தனியாக அமர்ந்து பேசுகிறார் . அப்போது எதுக்கு நீ இந்த ஷோவுக்கு வந்த ?நீ செய்றதெல்லாம் வெளில யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறாயா? என்று தாய் கேட்ட கேள்விகளால் அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்து இருக்கிறார் ஷிவானி .