Categories
தேசிய செய்திகள்

சீனர்கள் இந்தியா வர தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாட்டு அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. எல்லையில் பிரச்சனை தொடர்ந்து நீடித்து கொண்டு வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவை சேர்ந்தவர்கள் வேறு நாடுகளிலிருந்து, இந்தியாவுக்கு பயணம் செய்வதை தடுக்க விமான நிறுவனங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த நிலக்கரி ஏற்றிச் சென்ற 2 கப்பல்கள் சீன துறைமுகங்களில் ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |