முகநூல் மூலம் இரண்டு பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திநகர் பகுதியில் அனுஷியா (28) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி அவர் கணவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்பு அது மெல்ல மெல்ல காதலாக மலர்ந்தது.அதன்பின் அவர்கள் கோவையில் திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். அனுசியா ரூ.1 லட்சம் கடன் வாங்கி தன் கணவனுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.
அதன்பின் மாரிசெல்வம், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து முகநூல் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி (30)என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். மாரி செல்வம் ஒருநாள் சிவகாசி செல்வதாக கூறி மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளில் வேதாரண்யம் சென்றுள்ளார்.
அங்கு அவர் மாலதியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார். அனுஷியா தன் கணவரின் வாட்ஸ்அப் பக்கத்தில் உள்ள முகப்பு படத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரித்தபோது மாரி செல்வத்துக்கும், மாலதிக்கும் திருமணம் நடந்தது அனுஷ்காவிற்கு தெரியவந்தது.
இதனை அடுத்து அதிர்ச்சியடைந்து அனுசியா தன் பெற்றோர்களை அழைத்து கொண்டு வேதாரண்யம் சென்று மாரிசெல்வதை கேட்டுள்ளனர். அப்போது மாரிச்செல்வம் அனுஷியாவை மிகவும் கடுமையாக திட்டி கம்பியால் அடித்துள்ளார். அனுசியா மிகவும் படுகாயம் அடைந்தார். பின்பு அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அதன்பின் புகாரின்பேரில் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.