தமிழக மக்களை காக்கும் அரசுக்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்கும் வகையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
இதனை அடுத்து, ஏழை எளிய மக்களைகாக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாபொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், பொங்கல் பரிசு தொகை அதிமுகவினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.