Categories
தேசிய செய்திகள்

குளிர்காலத்தில் இத சாப்பிடாதீங்க… மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவ இருப்பதால் மதுபானம் சிறந்த தீர்வாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று முதல் ஹரியானா, பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் கடுமையான குளிர் பரவுவதால் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் குளிரால் தோல் கடினமாகும். உணர்ச்சியற்றதாக மாறும், கடுமையான குளிர் நிலை உருவாகும் போது சருமத்தில் அரிப்பு கொப்பளங்கள் மற்றும் உடல் நடுக்கம் ஏற்படும்.

இதுவே உடல் வெப்பத்தை இழக்கிறது என்பதற்கு முதல் அறிகுறி. குளிர்ச்சியை தவிர்க்க மதுபானம் பலருக்கு நல்ல யோசனையாக இருக்கலாம். ஆனால் சரியான தீர்வு அது இல்லை. ஆல்கஹால் உங்களை வெப்பமாக உணரக்கூடும். அது வெப்பநிலையைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் மது அருந்தும்போது, ஒரு நபர் தற்போது எவ்வளவு குளிராக இருக்கிறது என்பதை சரியாக உணரும் திறனை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆகவே, மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு வெளியே சென்றபின் தாழ்வெப்பநிலைக்கு ஆளாக நேரிடும் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Categories

Tech |