சிறை கைதி ஒருவர் சுரங்க ரயில் பாதை வழியாக தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிலுள்ள kent ல் இருக்கும் folkstone என்ற பகுதியில் சுரங்க ரயில் பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கப் பாதையில் அதிவேகமாக ரயில்கள் செல்வது வழக்கம். மேலும் இந்த ரயில் பாதையில் இறங்கினால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ரயில் போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படையும். இதில் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டாலும் ரயிலில் இருக்கும் பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் சுரங்க ரயில் பாதையில் திடீரென இறங்கி பிரான்சை நோக்கி ஓடியுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரயில் பாதையில் இறங்கிச் சென்ற இந்த மர்ம நபர் குறித்து இரண்டு நாட்டு காவல்துறையினருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அவர் வேகமாக ஓடிச்சென்று 31 மைல் கடந்து சுரங்கப் பாதையின் மறுமுனைக்கே சென்றுவிட்டார். அங்கு அவருக்காக காத்திருந்த பிரான்ஸ் காவல்துறையினர் உடனடியாக அவரை பிடித்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் போன்ற எந்த விபரங்களும் அவர் தெரிவிக்க மறுத்துள்ளார். மேலும் அவர் பிரிட்டனின் சிறைக்கைதி என்றும் அங்கிருந்து தப்பி வந்துள்ளார் என்பதும் பிரிட்டன் காவல்துறையினர் மூலம் பிரான்ஸ் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.